'கொரோனா என்னைவிட்டு விலகவில்லை': பிரிட்டன் பிரதமர் கலக்கம்

லண்டன்: 'கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதால் தொடர்ந்து தனிமையில் இருக்கப் போகிறேன்' என, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கலக்கத்துடன் தெரிவித்துள்ளார்.


போரிஸ் ஜான்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று (3ம் தேதி) மாலை வெளியிட்டுள்ள வீடியோவில், 'கடந்த ஏழு நாட்கள் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். ஆனாலும் எனக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருக்கின்றன. இன்னும் காய்ச்சல் இருக்கிறது. அதனால் அரசின் அறிவுரைப்படி, நான் தொடர்ந்து தனிமையில் இருக்கப் போகிறேன்' என, உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். 'அவர் விரைவில் மீண்டு வர வேண்டும்' என, பலரும் பதிவிட்டு வருகின்றனர்.